Published:Updated:

'உச்சநீதிமன்றத்தின் பேச்சையெல்லாம் கேட்க முடியாது!'- பிலிப்பைன்ஸ் அதிபரின் அடாவடி பேச்சு

'உச்சநீதிமன்றத்தின் பேச்சையெல்லாம் கேட்க முடியாது!'- பிலிப்பைன்ஸ் அதிபரின் அடாவடி பேச்சு
'உச்சநீதிமன்றத்தின் பேச்சையெல்லாம் கேட்க முடியாது!'- பிலிப்பைன்ஸ் அதிபரின் அடாவடி பேச்சு

பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ ட்யூடர்டே (Rodrigo Duterte), அந்நாட்டின் அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக போதைப் பொருளுக்கு எதிராக அவர் தொடுத்த 'போர்' மூலம் பல லட்சம் பேர் பிலிப்பைன்ஸ் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய தெற்கு பகுதியான மிண்டானவோ (Mindanao) பகுதியில், பல அசம்பாவிதங்கள் நடந்து வருகிறதாம். அங்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடி முஸ்லிம்கள் இருக்கும் இந்தப் பகுதியில், தற்போது ராணுவத்துக்கு எதேச்சதிகார உரிமை கொடுக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார் (martial law) அந்நாட்டு அதிபர். 

இந்த மார்ஷியல் சட்டம் மூலம், ஒருவரை கைது செய்யவோ, விசாரணை செய்யவோ எந்தவித ஆவணங்களும் தேவையில்லை என்பது ரோட்ரிகோவின் வாதம். 

ஆனால் உண்மையில் மார்ஷியல் சட்டத்தை அமல்படுத்தும் விதம் குறித்து பிலிப்பைன்ஸ் காங்கிரஸ் மற்றும் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கருத்து கூற முடியும். அதில் தேவையான மாற்றங்களையும் கொண்டு வர முடியும்.

இது குறித்து ரோட்ரிகோ, 'ராணுவத்தினர் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறும் வரையில் இந்த மார்ஷியல் சட்டம் அமலில்தான் இருக்கும். இது குறித்து பிலிப்பைன்ஸ் உச்சநீதிமன்றமோ அல்லது பிலிப்பைன்ஸ் காங்கிரஸோ கூறுவதை நான் கேட்கப் போவதில்லை. அவர்கள் யாரும் களத்தில் இருந்து உயிரை விடப்போவதில்லை. அவர்கள் ஒன்றும் ராணுவ வீரர்கள் அல்ல. கள நிலவரம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.' என்று கூறியுள்ளார்.