Published:Updated:

விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி..!

விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி..!
விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி..!

விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி..!

சாம்பியன்ஸ் டிராபியில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கெத்து காட்டிது, இந்திய அணி. குறிப்பாக, அப்போது தொழிலதிபர் விஜய் மல்லையாவும் ஆட்டத்தைக் காண நேரில் சென்றிருந்தார். வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்தாமல், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு மீட்டு வர இந்தியா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்த விஜய் மல்லையாவை, நெட்டிசன்ஸ் 'வெச்சு செய்தனர்'.

கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை சார்பில், அங்கு டின்னருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக விஜய் மல்லையாவுக்கு, கோலியோ, அவரது தொண்டு நிறுவனமோ நேரடி அழைப்பு கொடுக்கவில்லை.


ஆனால், விஜய் மல்லையா டின்னர் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இடத்தில், ஒரு டேபிளை ஆர்டர் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையா வருகிறார் என்று தெரிந்த இந்திய அணி, சீக்கிரமாகவே அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். விஜய் மல்லையாவைச் சந்தித்து, எந்த சர்ச்சையிலும் சிக்கக்கூடாது என்பதற்காக, இந்திய அணி சீக்கிரம் கிளம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு