Published:Updated:

கன்டெய்னரில் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீட்பு

கார்த்திக் துரைமகாராஜன்.சி
கன்டெய்னரில் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீட்பு
கன்டெய்னரில் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீட்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் 2 மாத காலமாக இரும்பு கன்டெய்னரில் அடைத்துவைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார். 

கன்டெய்னரில் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீட்பு


அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த டாட் கோஹௌப் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ஆயுள்  தண்டனை பெற்று சிறையில் இருந்துவருகிறார். அவருக்குச் சொந்தமான இடத்தில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த இடத்தில் கன்டெய்னர் ஒன்று இருந்துள்ளது. அந்த கன்டெய்னரைக் காவல்துறை அதிகாரிகள் கடப்பாரை மற்றும் ரம்பம் போன்ற கருவிகளைக் கொண்டு உடைத்துத் திறந்தனர்.

காற்றுப் புகமுடியாத அந்தக் கன்டெய்னரின் உள்ளே இளம் பெண் ஒருவர் கழுத்து மற்றும் கால் பகுதிகள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தார். நாயைக் கட்டிவைப்பது போல அவரும் கட்டப்பட்டு இருந்தார். அவரைக் காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அந்தப் பெண்ணின் பெயர் கலா ப்ரௌன். இதுகுறித்து தெரிவித்த ப்ரௌன், 'கடந்த இரண்டு மாத காலமாக இந்தக் கன்டெய்னரில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

ப்ரௌன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் டாட் கோஹௌப்பைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அதன் பிறகு இருவரும் காணாமல் போயியுள்ளனர். இந்த நிலையில் ப்ரௌன் கன்டெய்னரிலிருந்து மீட்கப்பட்டார். அவரது நண்பர் கொலை செய்யப்பட்டுள்ளார்.