Published:Updated:

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: முன்னிலையில் அதிபர் மேக்ரான்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: முன்னிலையில் அதிபர் மேக்ரான்!
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: முன்னிலையில் அதிபர் மேக்ரான்!

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று முடிவில் பிரான்ஸின் அதிபர் மேக்ரான் மற்றும் அவரது அணியினர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. அதில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்று பிரான்ஸின் இளம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 577 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் அதிபர் மேக்ரான் மற்றும் அவர் சார்ந்த கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் அதிபர் மேக்ரான் முன்னிலைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே, ஒரு அதிபராக தான் அளித்த வாக்குறுதிகளை மேக்ரானால் நிறைவேற்ற முடியும். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் 50% அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சமாக 12.5% வாக்குகள் மேல் பெற்ற வேட்பாளர்களைக் கொண்டு இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்தப்படும். இந்த இரண்டாவது சுற்று தேர்தல் முடிவுகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தவிர புதுச்சேரி போன்ற வெளிநாடுகளில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரானின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கருத்துகணிப்புகள் மற்றும் உள்நாட்டு ஊடகங்களின்படி அதிபர் மேக்ரானுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.