Published:Updated:

வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!

வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!
வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நிலச்சரிவினால், பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்கிறார்கள்.

வங்க தேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு..!


வங்கதேசத்தில்  பருவ மழையின் காரணமாக, மலைப் பகுதிகளான சிட்டகாங், ராங்கமட்டி, பந்தர்பன் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட மழையின் காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலன வீடுகள் சேற்றில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் ராங்கமட்டி மாவட்டத்தில் மட்டும், 103 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையின் காரணமாக சாலைகள் முழுவதுமாக சேதமாகியிருப்பதால், மீட்புப் படையினர் தம் பணியில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.  மீட்புப்பணியில் ஈடுபடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை, 140-ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது. வங்கதேசத்தில் இது, வரலாறு காணாத ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.