Published:Updated:

கவுதமாலாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கவுதமாலாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கவுதமாலாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கவுதமாலாவில் இன்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

கவுதமாலா நாட்டின் தலைநகரான தாஜுமுல்கோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாஜுமுல்கோ நகரின் தென்மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முதலில் கவுதமாலா நகரிலிருந்து 156 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சான் மைக்ரோஸ் நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கவுதமாலாவில் சுமார் 20 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதிர்ச்சியிலும், கட்டட இடிபாடுகளிலும் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என கவுதமாலா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

’மீட்புப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போது, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளோம்’ என கவுதமாலா அதிபர் ஜிம்மி மோரேல்ஸ் தெரிவித்துள்ளார்.