Published:Updated:

மழலையர் பள்ளியில் வெடிவிபத்து... சீனாவில் பரபரப்பு!

சண்முகபாண்டியன்.தே
மழலையர் பள்ளியில் வெடிவிபத்து... சீனாவில் பரபரப்பு!
மழலையர் பள்ளியில் வெடிவிபத்து... சீனாவில் பரபரப்பு!

சீனாவில் மழலையர் பள்ளி ஒன்றில் நடந்த வெடிவிபத்தில், 7 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Representative Image

கிழக்கு சீனாவில் இன்று மாலை மழலையர் பள்ளியின் வாசல் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகியதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 66 பேர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் சில குழந்தைகளும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் காவல் துறையினருக்கு உடனடி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் தரப்பில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது' என்றார். இதனால் கிழக்கு சீனா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.