Published:Updated:

விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

பைகோனுர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் ஏவுதளத்திலிருந்து நேற்று விண்வெளிக்குப் புறப்பட்டார்.

இது அவரது 2-வது விண்வெளிப் பயணமாகும்.இவருடன் ரஷியாவைச் சேர்ந்த யுரி மலென்சென்கோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த அஹிகோ ஹொஷிடே ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றனர்.

ரஷியாவின் சோயுஸ் விண்வெளி ஓடத்தில் புறப்பட்ட இவர்கள் 2 நாள் பயணத்துக்குப் பின் சர்வதேச விண்வெளி மையத்துடன் நாளை இணைய உள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த மே 17-ம் தேதி முதல் இருந்து வரும் ரஷியாவின் கென்னடி படல்கா மற்றும் செர்ஜய் ரெவின், நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அகபா ஆகியோருடன் இவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இவர்கள் 6 பேரும் விண்வெளியில் 2 மாத காலம் இணைந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர்.

படல்கா, ரெவின் மற்றும் அகபா ஆகியோர் செப்டம்பர் மாதம் பூமி திரும்புவர் என்றும் சுனிதா, மலென்சென்கோ மற்றும் ஹொஷிடே ஆகியோர் நவம்பர் மாதத்தில் திரும்புவர் என்றும் நாஸா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், 2006-2007-ம் ஆண்டில் 195 நாள்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை புரிந்துள்ளார்.