Published:Updated:

ட்ரம்ப்பின் முடிவை விமர்சிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ட்ரம்ப்பின் முடிவை விமர்சிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்!
ட்ரம்ப்பின் முடிவை விமர்சிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்!

ட்ரம்ப்பின் முடிவை விமர்சிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்!

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதன் மூலம் ட்ரம்ப் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் எனப் பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் மக்கள் தொகை, தொடரும் போர்கள் என பூமி அனுதினமும் அழிவை சந்தித்து வருகிறது. பூமியின் சமநிலையைப் பாதுகாக்க பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலை தொடருமானால், பூமியில் மனிதர்கள் வாழ்வது மிகவும் கடினம் எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே, 'பூமியை விட்டு நாம் வெளியேறி, வாழத்தகுந்த சூழலுள்ள வேறு கிரகங்களுக்குப் புலம் பெயர வேண்டும்' எனப் பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

அண்மையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதுகுறித்துப் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங், 'மிகவும் தவறான ஒரு முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவதால், மனித இனம் பூமியில் வாழும் சூழல் அழிந்து வருகிறது. இதனால், பூமியை விட்டு நாம் வெளியேறுவது கட்டாயமாகும். சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோல்களில் மனிதன் வாழும் சூழல் உள்ளதா என ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இளம் தலைமுறையினர் இது போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு