
இஸ்லாமாபாத்: 2008 ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியா வந்து விசாரணை குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்துச் சென்ற பாகிஸ்தான் குழு அளித்த தகவல்கள் மோசடியானவை என்று பாகிஸ்தான் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவரங்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த 7 முக்கியக் குற்றவாளிகளை பிடிப்பதில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism