Published:Updated:

எகிப்து தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு!

எகிப்து தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு!
எகிப்து தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு!

எகிப்து தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு!

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 60 ராணுவ வீரர்கள் இருந்த முகாம் மீது, கடந்த ஜூன் 7ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இப்பகுதியில் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவு இருந்து வரும் நிலையில், சினாய் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்த ஐ.எஸ் இயக்கமே பொறுப்பேற்றுள்ளது. 

ஆனால் ஐ.எஸ் இயக்கம் வருவதற்கு முன்பாகவே இப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. சீனாவின் தொலைதூரப் பகுதியாகவும், அதிகம் முன்னேற்றமடையாத பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளதால், தீவிரவாதிகளுக்கு சாதகமான பகுதியாக சினாய் இருக்கிறது. 

சில நாள்களுக்கு முன்பு நடந்த ராணுவத் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்று ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 2 தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு