Published:Updated:

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவு!
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவு!

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 9.40 மணி அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓர்மாக் அருகிலுள்ள லேட்டே மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேறினர். வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த வாரம் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். சுமார் 70 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒரே வாரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு