Published:Updated:

மூன்று லட்சம் குடைகள் மிஸ்ஸிங்... சீனாவில் கடை விரித்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

மூன்று லட்சம் குடைகள் மிஸ்ஸிங்... சீனாவில் கடை விரித்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
மூன்று லட்சம் குடைகள் மிஸ்ஸிங்... சீனாவில் கடை விரித்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சொந்தமாக ஒரு பொருளை வாங்கி அதனைக் காலம் முழுவதும் பயன்படுத்தும் காலம் மலையேறி விட்டது. இப்போது வாடகைக்கு பொருள்களை எடுத்து பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் மொபைல் வாலட் மற்றும் பார்கோடு ஸ்கேனர்களின் உதவியுடன், பைக் முதல் செல்போன் சார்ஜர் வரை எதை வேண்டுமானாலும் வாடகைக்குப் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. கார், பைக் போன்றவை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதும் அந்நாட்டில் பெரும் தொழில். அதைப் போலவே ‘ஷேரிங் இ அம்பெர்லா' என்ற பெயரில் சீனா முழுவதும் 11 நகரங்களில் குடை வாடகைக்கு விடும் பிசினஸ் தொடங்கப்பட்டது. 

சுமார், 10 மில்லியன் யுவான் முதலீட்டுடன் 'ஷேர் இ அம்பெர்லா' நிறுவனம் குடைகளை வாடகைக்கு விடத் தொடங்கியது. ஆப் மூலம் 19 யுவான் டெபாசிட் கட்டணம் செலுத்தி குடையை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். அப்படி குடையை வாடகைக்கு வாங்கி சென்றவர்கள் யாரும் திருப்பிக் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. குடையுடன் சென்று விட்ட வாடிக்கையாளர்களே அதிகம். இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் குடைகளை இழந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.