Published:Updated:

ஒரே வாரத்தில் கோடீஸ்வரியானார் 19 வயது பெண்!

ஒரே வாரத்தில் கோடீஸ்வரியானார் 19 வயது பெண்!
ஒரே வாரத்தில் கோடீஸ்வரியானார் 19 வயது பெண்!

ஒரே வாரத்தில் கோடீஸ்வரியானார் 19 வயது பெண்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ரோசா டோமின்கியூவுக்கு அடுத்தடுத்து இரண்டு லாட்டரி சீட்டுகள் அதிர்ஷ்டத்தை அள்ளித்தந்துள்ளன. 

இவர் கடந்த வாரம் அரிசோனா மாகாணத்தில் உள்ள லாட்டரி கடையில் 5 டாலர் மதிப்புள்ள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். இதற்கான பரிசுத் தொகை 5 லட்சத்து 55 ஆயிரம் டாலர் ஆகும். பிறகு, இரண்டு நாள்கள் கழித்து கலிஃபோர்னியாவில் காஸ் ஸ்டேஷன் பகுதியில் மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இதன் பரிசுத்தொகை ஒரு லட்சம் டாலர். 

இந்நிலையில் இரண்டு லாட்டரி சீட்டுகளிலும் இன்று அவருக்கு பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் சுமார் 6 லட்சத்து
55 ஆயிரம் டாலருக்குச் சொந்தக்காரரானார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். ''இப்படி ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி சீட்டுகளில் பரிசுத்தொகையைப் பெற்றதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். இந்தப் பணத்தை வைத்து தான் மிகவும் விரும்பும் கார் ஒன்றை வாங்கவும் முடிவு செய்துள்ளேன்'' என்று ரோசா தெரிவித்தார். 

அடுத்த கட்டுரைக்கு