Published:Updated:

கருணாநிதி குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு!

Vikatan Correspondent
கருணாநிதி குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு!
கருணாநிதி குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு!
கருணாநிதி குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு!

கொழும்பு: சீனாவின் ஒத்துழைப்புடன் தலை மன்னாரில் கடற்படை முகாம் ஒன்று

கருணாநிதி குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு!

  அமைக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு  இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசு தலைமன்னாரில் கடற்படை முகாம் ஒன்றை  அமைத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.

##~~##
இந்நிலையில் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை   அரசு,இக்குற்றச்சாட்டு தவறானது என்றும், இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும்  இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு சீன கப்பலோ அல்லது சீனரோ தலை மன்னார் பக்கம் சென்றதில்லை.வடக்கில்  உள்ள சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள், கருணாநிதிக்கு தவறான  தகவல்களை வழங்கி வருகின்றனர் என இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர்.