Published:Updated:

'டார்கெட் ஜப்பான் இல்லை, அமெரிக்கா': ட்விஸ்ட் வைத்த வட கொரியா!

'டார்கெட் ஜப்பான் இல்லை, அமெரிக்கா': ட்விஸ்ட் வைத்த வட கொரியா!
'டார்கெட் ஜப்பான் இல்லை, அமெரிக்கா': ட்விஸ்ட் வைத்த வட கொரியா!

உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதனை வட கொரியா பொருட்படுத்தாமல் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. இதற்குப் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 


இந்நிலையில், வட கொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ள சம்பவம், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளது. குறிப்பாக, ஜப்பான் கடற்கரை எல்லையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, வட கொரியா சோதனை செய்த ஏவுகணை 45 நிமிடங்களில், மூவாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 


இது குறித்து வட கொரிய அதிபர் கிம், "அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், எந்தப் பகுதியையும் இங்கிருந்து தாக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.