Published:Updated:

குடும்ப அரசியலுக்குத் தடை: ’எந்த ஊர்ல சார் இந்தச் சட்டம்..?’

ராகினி ஆத்ம வெண்டி மு.
குடும்ப அரசியலுக்குத் தடை: ’எந்த ஊர்ல சார் இந்தச் சட்டம்..?’
குடும்ப அரசியலுக்குத் தடை: ’எந்த ஊர்ல சார் இந்தச் சட்டம்..?’

நாட்டின் அமைச்சர்களும் முக்கிய அரசு அதிகாரிகளும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அரசு வேலைகளிலோ, அரசு சம்பந்தமான இதர பணிகளிலோ நியமிக்கக்கூடாது என பிரான்ஸ் நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில், நாடாளுமன்ற எம்.பி-க்கள், அமைச்சர்கள் எனச் சில முக்கியப் பிரமுகர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்களுக்குத் தேவையான அரசுப் பணிகளில் நியமிப்பதாக குற்றம் எழுந்துள்ளது. இது போன்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, பிரான்ஸ் அரசு பதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என யாரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்கள் உதவியாளர் பணியில்கூட நியமிக்கக்கூடாது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்யும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுக்குத் தேவையான அரசுப் பணிகளிலோ, தங்கள் உதவியாளராகவோ நியமித்தால், 40 லட்சம் ரூபாய் அபராதமும்  மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசு அதிரடியான அறிவிப்பை எம்.பி-க்களுக்கு வழங்கியுள்ளது.