Published:Updated:

தமிழகத்தில் சந்திர கிரகணம்!

குருபிரசாத்
தமிழகத்தில் சந்திர கிரகணம்!
தமிழகத்தில் சந்திர கிரகணம்!

சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வருவது  சந்திர கிரகணம் எனப்படும். சந்திரன் மறைக்கப்படுவது சந்திரகிரகணம் என்றும், சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரகிரகணமானது பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணமானது அமாவசையிலும் ஏற்படும். முழுமையாக ஏற்படும் சந்திர கிரகணம் பூரண சந்திர கிரகணம் என்றும், முழுமையடையாமல் அரைகுரையாக இருந்தால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.


இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 10.51 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்கியது. இதை சூடாமணி சந்திர கிரகணம் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சந்திர கிரகணம் தெரிந்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள், டெலஸ்கோப் மூலமாக சந்திர கிரகணத்தை கண்டுகளித்தனர். அதேபோல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. 


சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பூஜை நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நள்ளிரவு 12.49 மணி அளவில் சந்திர கிரகணம் முடிவடைந்தது.