Published:Updated:

ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது: ராஜபக்ச

ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது: ராஜபக்ச
ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது: ராஜபக்ச
ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது: ராஜபக்ச

கொழும்பு: ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையின் குருவிட்ட ராணுவ முகாமில் நடைபெற்ற படையணிக்கான இலட்சினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  கூறினார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையே கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை பாதிப்படைய செய்வதற்கு ஈழ ஆதரவாளர்கள் மீண்டும் முயற்சித்து வருவதாக ராஜபக்‌ச குற்றம் சாட்டினார்.

தாம் பிறந்த நாட்டை வெளிநாடுகளிலோ, அல்லது வெளிநாட்டவர்களிடமோ விமர்சிப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்,தாய் நாட்டின் மீது பற்றுகொண்டவர்கள் எவரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

##~~##
கடந்த 40 வருடங்களுக்கு முன்னதாக வட்டுக்கோட்டையில் தனியான நாடொன்றை கோரும் யோசனை கொண்டுவரப்பட்டமை போன்றே தமிழீழத்திற்கு உயிரூட்டும் முயற்சியை மீண்டும்செயற்படுத்த முனைப்புகள் காட்டப்படுகின்றன.
ஈழவாதிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை.
வேறு நாடுகளில் தனிநாடுகள் உருவாகிய போதும் தமது நாட்டில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் மேலும் பேசினார்.