Published:Updated:

இந்தியாவுடன் ஆக்கபூர்வ உறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் ஆக்கபூர்வ உறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவுடன் ஆக்கபூர்வ உறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் ஆக்கபூர்வ உறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்

அண்டைநாடுகளுடன் ஆக்கபூர்வ உறவையே விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’உலக நாடுகள் அனைத்துடனும் குறிப்பாக அண்டை நாடுகளுடன் இறையாண்மை சமத்துவம் அடிப்படையில் ஆக்கபூர்வமான உறவைப் பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தெற்காசியாவில் நிலவி வரும் மோதல்போக்கால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்னைகளுக்கு இணக்கமான தீர்வு காணாமல் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது. இந்த பிராந்தியத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உலக நாடுகள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ, காஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்னைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் அடிப்படையில் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டார்.    

அடுத்த கட்டுரைக்கு