Published:Updated:

ராணி எலிசபெத் மறைவு; வானில் தோன்றிய இரட்டை வானவில் - ஆச்சரியத்தில் ஆழ்ந்த பிரிட்டன் மக்கள்!

எலிசபெத் ராணி

வானத்தில் தோன்றிய இரட்டை வானவில்லைப் பார்த்து, பிரிட்டன் மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

ராணி எலிசபெத் மறைவு; வானில் தோன்றிய இரட்டை வானவில் - ஆச்சரியத்தில் ஆழ்ந்த பிரிட்டன் மக்கள்!

வானத்தில் தோன்றிய இரட்டை வானவில்லைப் பார்த்து, பிரிட்டன் மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

Published:Updated:
எலிசபெத் ராணி

70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டில் முடியாட்சி நடத்தியவர் ராணி இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்தார். இந்த நிலையில், தனது 96 வயதில் நேற்று காலமானார். பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மரணம் இங்கிலாந்து மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்குக் கொண்டு வரப்படும் என்ற தகவலை அறிந்த மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கொட்டும் மழையிலும் பக்கிங்காம் அரண்மனைக்கு முன் திரண்டுள்ளனர்.

வானவில்
வானவில்

இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானத்தில், நேற்று (8.09.2022) ஒன்றின் மேல் ஒன்றாக இரட்டை வானவில் தோன்றியுள்ளது. இதனை ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருந்த பொதுமக்கள் கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர். பலரும் அதனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின் ராணியின் மறைவிற்கும், வானில் தோன்றிய அதிசய நிகழ்விற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக பிரிட்டன் மக்கள் தொடர்புப்படுத்திக் கொண்டனர்.