Published:Updated:

Emotional Video: உக்ரைன் போர்; மலர்களோடு வீடுதிரும்பிய தந்தை, கண்ணீருடன் அணைத்துக்கொண்ட மகள்!

மகளுடன் உக்ரைன் வீரன்

போரிலிருந்து வீடு திரும்பிய தன் தந்தையை, மகள் கண்ணீருடன் அணைத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.

Emotional Video: உக்ரைன் போர்; மலர்களோடு வீடுதிரும்பிய தந்தை, கண்ணீருடன் அணைத்துக்கொண்ட மகள்!

போரிலிருந்து வீடு திரும்பிய தன் தந்தையை, மகள் கண்ணீருடன் அணைத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.

Published:Updated:
மகளுடன் உக்ரைன் வீரன்

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், போரிலிருந்து வீடுதிரும்பிய உக்ரேனிய வீரரை, அவரின் மகள் கண்ணீருடன் அணைத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்யப் படைகளால் உக்ரைனில் தொடங்கப்பட்ட போர், 4 மாதங்களைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரத் தடைகள், ஐ,நா-வின் தலையீடு, பேச்சுவார்த்தை, உணவுப்பஞ்சம் என எத்தனையோ நிகழ்ந்தும் கூட, புதின் தனது முடிவிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

மேலும் இந்தப் போரால், உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இறந்ததுமட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர். இந்தச் சூழலில், போரிலிருந்து வீடு திரும்பிய தன் தந்தையை, மகள் கண்ணீருடன் அணைத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.

உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோவால்(Anton Gerashchenko) `போரிலிருந்து அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார்' என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், பெண் ஒருவர் தன் குழந்தையின் கண்களை மூடிக்கொண்டு, அவரை வெளியிலிருந்து வீட்டுக்குள் அழைத்து வருகிறார். உள்ளே போரிலிருந்து வீடு திரும்பிய அந்தக் குழந்தையின் தந்தை அவளை சர்ப்ரைஸ் செய்வதற்காக காத்திருக்கிறார். உள்ளே வந்தவுடன் அந்தப் பெண் குழந்தையின் கண்களை திறக்கச் செய்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிரில் பல மாதங்களுக்கு முன்பு போருக்குச் சென்ற தன் தந்தை இருப்பதைக் கண்டு வியப்பில் திகைத்துப் போன அந்தக் குழந்தை, சில நொடிகள் ஏக்கத்துடன் அவரைப் பார்த்துவிட்டு, அழுதபடி அவரை அணைத்துக் கொள்கிறாள். அவளை ஆசுவாசப்படுத்திய உக்ரைன் வீரர், தான் கொண்டுவந்திருந்த மலர் கொத்தை அவளிடம் கொடுக்கிறார்.... இப்படியாக அந்த வீடியோ முடிகிறது.

இணையத்தில் இந்த எமோஷனல் வீடியோ வைரலானதையடுத்து, பலரும் போருக்குச் சென்று திரும்பிய தங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்த நினைவை நெகிழ்வுடன் பதிவுசெய்து வருகின்றனர்.