Published:Updated:

உலகம் கைவிட்ட நிலம்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

நாட்டின் அமைதியே எங்களுக்கு முக்கியம். 20 ஆண்டுகள் எங்களை எதிர்த்துப் போரிட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவோம்.

உலகம் கைவிட்ட நிலம்!

நாட்டின் அமைதியே எங்களுக்கு முக்கியம். 20 ஆண்டுகள் எங்களை எதிர்த்துப் போரிட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவோம்.

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பிரபலமான விளையாட்டு புஸ்கேஷி. அந்த மண்ணின் முரட்டுத்தனத்துக்கு அதுவே அடையாளம். இறந்த ஆட்டின் சடலத்தை, குதிரைகளில் சவாரி வரும் வீரர்களில் ஒருவர் அடித்து இழுத்துச் சென்று ஒரு கோல் போஸ்ட்டில் நுழைக்க வேண்டும். ஆட்டைக் கைப்பற்ற பல மணி நேரம் ஆக்ரோஷமாகப் போட்டி நீடிக்கும். பந்துபோல மைதானத்தில் உருட்டப்படும் அந்தச் செத்த ஆட்டின் நிலையில்தான் ஆப்கன் மக்கள் இப்போது இருக்கிறார்கள்.

ஒரு நாடு கைவிடப்படுவதை சமீப வரலாற்றில் நாம் பார்த்ததில்லை. ஆகஸ்ட் 15 அன்று காபூலில் நடந்த காட்சிகளை உலகம் பார்த்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்த முக்கிய ஆவணங்களை மொத்தமாகக் குவித்து எரித்துவிட்டு, ஜனாதிபதி அஷ்ரப் கனி வெளிநாட்டுக்குத் தப்பினார். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் என்று பல நாடுகளின் தூதரகங்களிலும் ஆவணங்களை அழித்துவிட்டு அதிகாரிகள் தப்பி விமான நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல வந்த போர் விமானங்களில் தொற்றிக்கொண்டாவது எங்காவது சென்றுவிடலாம் என்று செய்த முயற்சியில் மூன்று பேர் விமானத்திலிருந்து விழுந்து இறந்தது துயரம். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நரகத்தில் சிக்கிக் கிடக்கிறார்கள் ஆப்கன் மக்கள்.

உலகம் கைவிட்ட நிலம்!

20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டிப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவம் சரணடைந்துவிட, ஒரு புயல்போல தாலிபன் அமைப்பினர் தேசத்தைக் கைப்பற்றினர். தீவிரவாதிகளை வேரறுக்க 20 ஆண்டுகளாக அமெரிக்கா சுமார் 160 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துப் போரிட்டு சலித்துப்போய் வெளியேறிய சில நாள்களில் முன்பைவிட வலிமையாக வந்து அமர்ந்திருக்கிறார்கள் தாலிபன்கள். ஜனாதிபதி மாளிகையிலும், சுமார் 1,000 கோடி ரூபாய் செலவிட்டு இந்தியா கட்டிக்கொடுத்த நாடாளுமன்றத்திலும் துப்பாக்கிகளுடன் தாலிபன் வீரர்கள் குவிந்திருக்கும் புகைப்படங்கள், இனி அங்கு ஆயுதங்களின் ஆட்சியே இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.

‘‘நாட்டின் அமைதியே எங்களுக்கு முக்கியம். 20 ஆண்டுகள் எங்களை எதிர்த்துப் போரிட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவோம். யாருடைய உயிர், உடைமை, கண்ணியத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. வர்த்தகம் பாதிக்கப்படாது’’ என்று தாலிபன் அமைப்பு சொன்னது. ஆனால், நிஜம் வேறு. காபூலைக் கைப்பற்றிய அடுத்த நாளே தாலிபன் வீரர்கள் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தினர். ராணுவம் மற்றும் போலீஸில் பணிபுரிந்தவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் அவர்களின் இலக்குகள்.

உலகம் கைவிட்ட நிலம்!

உண்மையில் தாலிபன் அமைப்புக்கு மூன்று முகங்கள். அதன் அரசியல் பிரிவு சமாதானம் பேசும். ‘ரஹ்பாரி ஷுரா’ என்ற 26 தலைவர்களைக் கொண்ட குழு போரையும் அரசாங்கத்தையும் நடத்தும். போர் வெறி ஏற்றப்பட்ட வீரர்கள் களத்தில் தாங்கள் நினைத்த எதையும் செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கமாண்டர் இருப்பார். அங்கு அவர் வைத்ததுதான் சட்டம். கஜினி மாகாணத்தில் ஒரு கமாண்டர் வீடு வீடாகப் போய் 27 அரசு ஊழியர்களை மொத்தமாகப் பிடித்து, சுட்டுக் கொன்றுவிட்டார்.

அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளியேறிய நிமிடத்திலிருந்து ஒவ்வொரு மாகாணமாக தாலிபன்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். தாலிபன்கள் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் கிராமங்களிலிருந்து 2,82,000 பேர் காபூலையும் மற்ற நகரங்களையும் தஞ்சம் தேடி ஓடினர். தாலிபன் வசமான கிராமப்புறங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கடைகள் என எல்லாமே மூடிக் கிடக்கின்றன. ஆப்கன் ராணுவத்தின் கைகளில் அமெரிக்கா கொடுத்து வைத்திருந்த நவீன ஆயுதங்கள் இப்போது தாலிபன்கள் கையில்! இவ்வளவு காலம் சிறைகளில் வாடிய தங்கள் குழுவினரையும் மீட்டுவிட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் அரசுக்கும் வெளிநாட்டுப் படைகளுக்கும் தங்களைப் பற்றி உளவு சொன்னவர்கள் அத்தனை பேரையும் இப்போது தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகம் கைவிட்ட நிலம்!

தாலிபன்களை அழிக்க முடியாத மேற்கத்திய நாடுகள் இப்போது ஆப்கன் பற்றிக் கவலையுடன் பேசுகின்றன. ஐ.நா உள்ளிட்ட அத்தனை மன்றங்களிலும் ஆப்கன் மக்களின் துயரம் பற்றி அவர்கள் கவலையுடன் விவாதிக்கக்கூடும். இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் சீனாவும் தாலிபன்களுடன் கைகோப்பது குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டன. வட கொரியா என்ற செல்லக் குழந்தையை வளர்த்து உலகின் கண்களில் விரல் விட்டு ஆட்டும் சீனாவுக்கு ஆப்கன் இன்னொரு குழந்தையாகக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் நிலைதான் தர்மசங்கடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism