Published:Updated:

"ஒரே வீட்டில் 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் ஒற்றுமையாக இருக்கிறேன்; இதனால்தான்!" - விளக்கும் டேவிட்

15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் ( ட்விட்டர் )

கென்யாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு 15 மனைவிகள் மற்றும் 107 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா (61). இவருக்கு இதுவரை 15 மனைவிகள் இருக்கின்றனர். மேலும் மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இவர்களின் குடும்பம் குறித்து அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மேலும் யூடியூபில் இவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகியிருக்கிறது. இந்த ஆவணப்படம் இரண்டு நாள்களுக்குள் 2.6 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

15 மனைவிகளுடன் வாழும் நபர்
15 மனைவிகளுடன் வாழும் நபர்
ட்விட்டர்

அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலுஹானா, ``கிங் சாலமோனுக்கு மொத்தம் 1,000 மனைவிகள் இருந்தனர். நானும் கிங் சாலமோனை போன்றவன்தான். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால்தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி இருக்கிறேன். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். சாலமோனைவிட நான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை'' எனத் தெரிவித்தார்.

டேவிட்டின் மனைவிகளில் ஒருவரான ஜெசிகா என்பவர், "அவர் புதிய பெண்களை அழைத்து வருவதைப் பற்றி நான் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் எதைச் செய்தாலும் அது எப்போதும் சரியாக இருக்கும்'' என்றார்.