ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவிலிருந்து சுமார் 297 கி.மீ தொலைவிலுள்ள புகுஷிமா நகர் கடற்கரைப் பகுதி அருகே நள்ளிரவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அளவு பதிவாகியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், டோக்கியோ நகரத்தில் வீடுகள், கட்டடங்கள் அதிர்வடைந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்; 90 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில், மியாகி அருகே ஷிரோஷி சென்றுகொண்டிருந்த புல்லட் ரயில் தடம்புரண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்பாராத சமயத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானில் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.