Published:Updated:

ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலி - ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சியின் மாஸ்டர்பிளான்!

ஜாக் டோர்சி, எலான் மஸ்க்

ட்விட்டரின் முன்னாள் CEO-வான ஜாக் டோர்சி தற்போது ட்விட்டருக்குப் போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலி - ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சியின் மாஸ்டர்பிளான்!

ட்விட்டரின் முன்னாள் CEO-வான ஜாக் டோர்சி தற்போது ட்விட்டருக்குப் போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

Published:Updated:
ஜாக் டோர்சி, எலான் மஸ்க்

கடந்த 2006-ம் ஆண்டு, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகியோருடன் இணைந்து ஜாக் டோர்சி நிறுவினார். 2008-ம் ஆண்டில் ட்விட்டரின் தலைவர் பதவியிலிருந்து விலகிச் சென்ற ஜாக் டோர்சி 'Square' என்ற செயலியை நிறுவினார்.

பின் 2015-ம் ஆண்டு அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிக் கோஸ்டோலோ தனது பதவியிலிருந்து விலகியதால் மீண்டும் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியானார் (CEO) ஜாக் டோர்சி. ஆனால் ஒற்றை இலக்குடன் பயணிக்கக் கூடிய தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க வேண்டும் என ட்விட்டரின் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததால் ஜாக் டோர்சி ராஜினாமா செய்துவிட்டு ட்விட்டரில் இருந்து விலகினார்.

ஜாக் டோர்சி
ஜாக் டோர்சி

இந்நிலையில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் ட்விட்டரின் முன்னாள் CEO-வான ஜாக் டோர்சி தற்போது ட்விட்டருக்குp போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்துக் கூறுகையில், "'புளூஸ்கை' என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தச் செயலி வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்குப் பதிலாகப் பல தளங்களால் இயக்கப்படும். எந்த நிறுவனம் தன் பயனாளர்களின் தரவைச் சொந்தமாக்க முயற்சி செய்கிறதோ அவற்றிற்குப் போட்டியாக புளூஸ்கை இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "பயனர் தரவை மீட்டெடுக்க முடியும். பயனர்களின் தரவுகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர்" என்றும் விவரித்துள்ளார்.