Published:Updated:

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் 4 பேர் பலி!

துப்பாக்கிச்சூடு ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவின், ஓக்லஹோமா மாகாணத்தின் மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழப்பு.

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் 4 பேர் பலி!

அமெரிக்காவின், ஓக்லஹோமா மாகாணத்தின் மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழப்பு.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவின், ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரிலுள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பொதுமக்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) மாலை, துல்சா நகரிலுள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். எதிர்பாராத இந்த சம்பவத்தில், நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துப் பேசிய போலீஸார், இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் நான்கு பேருடன், துப்பாக்கிச்சூடு நடத்திய நடத்திய நபரும் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர்.

முன்னதாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியொன்றில், 18 வயது இளம் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது அமெரிக்க மக்களிடையே அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism