Published:Updated:

890 விபத்துகள், 3,857 பேர் பலி: 2010 முதல் 2019 வரை ஏற்பட்ட விமான விபத்துகள்! #VikatanInfographics

2018-ம் ஆண்டைக்காட்டிலும் 2019-ல் விமான விபத்தால் ஏற்படும் இறப்புகள் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாக TO70’S CIVIL AVIATION SAFETY REVIEW 2019 அறிக்கை தெரிவித்துள்ளது.

விமான விபத்துகள்
விமான விபத்துகள்

இரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரான் நேரப்படி இன்று (8.1.2020) காலை 6.12 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8.12) 170 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு போயிங் 737 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.

Playback of flight PS752 / AUI752
Playback of flight PS752 / AUI752
Flightradar24

விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இடத்துக்கு மீட்புப் பணிக்காக நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 22 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் விமான விபத்துகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. 2018-ல் போயிங் 737 விமானம் ஜகார்தாவிலிருந்து இந்தோனேசியா புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி 189 பேர் பலியாகினர். இந்த மோசமான விபத்தின் காரணமாகப் பலருக்கும் விமானத்தில் செல்வதற்கு பயம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி கியூபாவில் நடந்த விமான விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர். இரான் நாட்டில் ஜாக்ரோஸ் மலையில் விமானம் மோதியதால் 66 பேர் பலியாகினர். நேபாளத்தில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விபத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். இப்படித் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.

விபத்துக்குள்ளான போயிங் 737 விமானம்
விபத்துக்குள்ளான போயிங் 737 விமானம்
Flightradar24
விமான விபத்து
விமான விபத்து
`ஒரு மணிநேரத் தாமதம்; ஒருவர்கூட பிழைக்கவில்லை!' - இரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்

சமீபத்தில் TO70’S CIVIL AVIATION SAFETY REVIEW 2019 அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் 86 வணிக விமானங்கள் விபத்துக்குள்ளாகி, அதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2018-ஐ விடக் குறைவு. 2018-ல் 160 விமான விபத்துகளில் 534 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டைக்காட்டிலும், 2019-ல் விமான விபத்தினால் ஏற்படும் இறப்புகள் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்து
விமான விபத்து
Vikatan Infographics
கருகிய கங்காருகள், தீயணைக்க பறக்கும் ஹெலிகாப்டர்கள்; நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ! #PhotoAlbum

விமான விபத்துகள் ஒருபுறம் இருக்க விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 2018-ல் மட்டும் 423.3 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 16.40 கோடி பேர். உலகளவில், அதிகமாக விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

விமான பயணம்
விமான பயணம்
Vikatan Infographics

2019-ல் உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்த விமான விபத்து என்றால் எத்தியோப்பியா விமான விபத்துதான், சுமார் 33 நாட்டுமக்களின் உயிரைப் பறித்த கொடூர விபத்து. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட குழுவுடன் போயிங் 737 விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட 6 வது நிமிடத்தில் அபாபா நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டூ என்ற நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 157 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் கென்யா, எத்தியோப்பியா, கனடா, இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எத்தியோப்பியா விமான விபத்து
எத்தியோப்பியா விமான விபத்து

கட்டுப்பாட்டை இழப்பது, எந்திரக் கோளாறுகள், மனித தவறுகள், சுற்றுப்புற இடையூறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் விமான விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. விமான விபத்து கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு விமான போக்குவரத்துக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டாகும். இதே போல் 2020-ம் ஆண்டும் சிறப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே, உலகம் முழுவதும் போயிங் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.