Published:Updated:

இஸ்ரேல்: செய்தி சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

பெண் பத்திரிகையாளர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது, இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இஸ்ரேல்: செய்தி சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது, இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
பெண் பத்திரிகையாளர்

இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில், இஸ்ரேல் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் பெண் பத்திரிகையாளர் ஷீரின் அபு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷீரின் அபு என்ற பெண் பத்திரிகையாளர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது, இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள் ஷீரின் அபுவின் மரணத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து, அல்-ஜசீரா பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஷிரீன் அபுவின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

``ஷிரீன் அபு பத்திரிகையாளர் உடை மற்றும் ஹெல்மெட் ஆகியவை அணிந்திருந்தபோதும், இஸ்ரேலியப் படைகள் அவரை முகத்தில் சுட்டுக் கொன்றனர்" என கத்தாரின் உதவி வெளியுறவு அமைச்சர் லோல்வா அல் காதர் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism