Published:Updated:

`ஒரே மருத்துவமனையில் வேலைபார்த்த 9 செவிலியர்களுக்கு மகப்பேறு’ - வைரலாகும் புகைப்படங்கள்

ஆ.சாந்தி கணேஷ்

``இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணிக்குக்கூட ஒருவருக்கு ஒருவர் செக்கப் செய்துகொண்டிருக்கிறோம்.''

Nine labour and delivery nurses and their kids
Nine labour and delivery nurses and their kids ( Carly Murray photography )

ஒன்பது ரோஜாக்களை வட்டவடிவில் வைத்ததுபோல இருக்கிறார்கள் அந்த ஒன்பது குழந்தைகளும்... பிறந்து மூன்று வாரத்திலிருந்து மூன்று மாதங்கள் வரைக்குமான வயதுகளில் இருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள். இன்னொரு புகைப்படத்தில் ஒன்பது அம்மாக்களும் தங்கள் குழந்தைகளைக் கைகளில் ஏந்தியபடி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை எடுத்த கார்லி முர்ரே (Carly Murray), இதைத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதோடு, 'இந்தக் குழந்தைகளின் 9 அம்மாக்களும் அமெரிக்காவின் போர்ட்லாந்தில் உள்ள 'மெயின்' மருத்துவமனையில் உள்ள மகப்பேறுப் பிரிவில் செவிலியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

kids' photo
kids' photo
Carly Murray photography

`என் குழந்தைகள் தற்போது வளர்ந்துவிட்டார்கள் என்றாலும், நான் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது மகப்பேறுப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் எனக்கு எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பதை நினைத்துப்பார்க்கிறேன். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தங்களுடைய அம்மாக்கள் எவ்வளவு புனிதமான பணியைச் செய்துவந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்' என்று கமென்ட்டும் போட, இரண்டு புகைப்படங்களும் வைரலாகிவிட்டன.

5 மாதங்களுக்கு முன்னால், இந்த அம்மாக்கள் கர்ப்பமாக இருந்தபோதும் இணையதளங்களில் வைரலானவர்கள். அனைவரும் ஒரே நிறத்தில் பேன்ட், டீ ஷர்ட் அணிந்து, கைகளில் தங்களுடைய டெலிவரி தேதி எழுதிய சார்ட்டை வைத்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அவர்கள் வேலைபார்த்த மருத்துவமனை நிர்வாகம் உட்பட எல்லோரின் வாழ்த்துகளையும் பெற்று வைரலானர்கள். தற்போது தங்கள் குழந்தைகளுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறார்கள்.

when they were pregnant
when they were pregnant
Maine Medical Center

'நாங்கள் ஒரே இடத்தில் ஒன்றாக வேலைபார்த்தோம். மற்ற பெண்களுக்கு குழந்தை பிறக்க உதவிசெய்த அதே நேரம், எங்களுக்கு ஒருவர் மாற்றி இன்னொருவர் ஹெல்த் செக்கப் செய்துகொண்டோம். இரவுப்பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணிக்குக்கூட ஒருவருக்கு ஒருவர் செக்கப் செய்திருக்கிறோம்'' என்கிறார்கள் சந்தோஷ முகங்களுடன். மருத்துவமனையில் கர்ப்பிணிகளுடன் இருந்தவர்கள் தற்போது, தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மாதவிடாய்போலவே, கர்ப்பமாவதும்கூட தொற்றுகிற ஒரு விஷயம் என்பதை ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அமெரிக்காவின் இந்த ஒன்பது அம்மாக்களும் அதை நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார்கள் அறிவியல் அறிந்தவர்கள்.