Published:Updated:

சடலங்களின் உடல் உறுப்புகளை விற்ற மயான உரிமையாளர் பெண்; நீதிமன்றத்தில் சொன்ன காரணம்!

மரணம் ( சித்திரிப்புப் படம் )

இறுதிச் சடங்கு செய்ய, ஒவ்வொரு சடலத்துக்கும் 1,000 டாலர் அளவுக்கு பணம் வசூலித்துள்ளார் மேகன் ஹெஸ். பணத்தைப் பெற்றுக்கொண்டு, உறவினர்களிடம் செயற்கையான சாம்பலைக் கொடுத்துள்ளார். சடலங்களின் தலை, முதுகு, கை, கால்களை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவைப்படுபவர்களுக்கு விற்றுள்ளார்.

சடலங்களின் உடல் உறுப்புகளை விற்ற மயான உரிமையாளர் பெண்; நீதிமன்றத்தில் சொன்ன காரணம்!

இறுதிச் சடங்கு செய்ய, ஒவ்வொரு சடலத்துக்கும் 1,000 டாலர் அளவுக்கு பணம் வசூலித்துள்ளார் மேகன் ஹெஸ். பணத்தைப் பெற்றுக்கொண்டு, உறவினர்களிடம் செயற்கையான சாம்பலைக் கொடுத்துள்ளார். சடலங்களின் தலை, முதுகு, கை, கால்களை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவைப்படுபவர்களுக்கு விற்றுள்ளார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றின் இயக்குரும், மயான உரிமையாளருமான மேகன் ஹெஸ் என்ற பெண் தன்னுடைய நிறுவனத்துக்கு வரும் சடலங்களை மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு சட்டவிரோதமாக விற்றுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Funeral
Funeral

அமெரிக்காவின் கொலோராடோ மாகாணத்தில் வசிப்பவர் மேகன் ஹெஸ். இவர் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனம் ஒன்றை அப்பகுதியில் நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தை அணுகும் இறந்துபோனவர்களின் குடும்பத்திடம் சடலங்களைப் பெற்று, அவற்றை முறையாக அடக்கம் செய்யாமல், அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். அதாவது, அந்தச் சடலங்களின் தலை, முதுகு, கை, கால்களை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவைப்படுபவர்களுக்கு விற்றுள்ளார். சடலங்களில் இருந்து தங்க பற்களை எடுத்து, கிட்டத்தட்ட 4,000 டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறுதிச் சடங்கு செய்ய, ஒவ்வொரு சடலத்துக்கும் 1,000 டாலர் அளவுக்கு பணம் வசூலித்துள்ளார் மேகன் ஹெஸ். பணத்தைப் பெற்றுக்கொண்டு, உறவினர்களிடம் செயற்கையான சாம்பலைக் கொடுத்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு, கான்கிரீட் கலவையைக் கொடுத்துள்ளார். மேலும், ஆராய்ச்சிக்கு உடல்களைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு போலி ரசீது தயாரித்துக் கொடுத்துள்ளார். அவரது வீட்டில் விசாரணை நடத்தியபோது போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க, கொலராடோவில் உள்ள கிராண்ட் ஜங்ஷனில் அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி கோர்டன் கல்லாகர் முன் நடந்த விசாரணையில் ஹெஸ் மீது மோசடி வழக்கில் விசாரணை நடைபெற்றது. முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தனக்கு எதிரான வழக்கு ஒரு சட்ட கேலிக்கூத்து என்றார் ஹெஸ். சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஒப்புக்கொண்டார். ’மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு நான் சடலங்களின் பாகங்களை விற்றேன். சட்டப்படி இது குற்றமில்லை. ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்களை நான் ஏமாற்றிவிட்டேன்’ என்று கூறியுள்ளார் ஹெஸ்.

Death (Representational Image)
Death (Representational Image)

அமெரிக்காவில், உடல் உறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம். ஆனால், சடலங்களை விற்கும் குற்றம் சட்டப்படி முறைப்படுத்தப் படாமல் இருக்கிறது.

முன்னதாக ஹெஸ்ஸின் அம்மா ஷெர்லி கோச், உடல் உறுப்பு விற்பனையில் குற்றம் சாட்டப்பட்டு, வால்ட் டிஸ்னி வேர்ல்டு பயணத்துக்காக அந்தப் பணத்தை செலவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் 12 முதல் 15 ஆண்டுகள் வரை ஹெஸ்ஸுக்கு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கோர, ஜூலை 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.