Published:Updated:

`வாங்கப்போனது 600 டாலர்... கிடைச்சதோ...’ - அமெரிக்க இளைஞருக்குக் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

லாட்டரி பரிசுத்தொகையை வாங்கச் சென்ற இளைஞர் ( ட்விட்டர் )

வர்ஜீனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் வென்ற லாட்டரி பரிசுத்தொகையை பெறுவதற்காகச் சென்றபோது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அமெரிக்காவில் வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜோஸ் புளோரஸ் வெலாஸ்குவெஸ் என்பவர் சோடா பானம் வாங்க அருகிலிருந்த கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது `20X தி மணி ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை' அவர் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருக்குப் பரிசு கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர், தன்னுடைய 600 டாலர் பரிசைப் பெறுவதற்காக வுட்பிரிட்ஜிலுள்ள வர்ஜீனியா லாட்டரியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவருடைய டிக்கெட்டின் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் எனக் கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டு அவர் திகைத்துப்போனார். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்.

லாட்டரி பரிசுத்தொகை வாங்கச் சென்ற இளைஞர்
லாட்டரி பரிசுத்தொகை வாங்கச் சென்ற இளைஞர்
ட்விட்டர்

மேலும், டிக்கெட்டை வெற்றிகரமாக விற்றுக் கொடுத்தற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு லாட்டரி நிறுவனம் 10,000 டாலர் போனஸாக வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. மகிழ்ச்சியுடன் பரிசுத்தொகையைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் புளோரஸ் வெலாஸ்குவெஸ், அவருடைய குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கும், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கும் பரிசுத்தொகையைப் பயன்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார்.