Published:Updated:

70 குண்டுகள்; தந்தத்துக்கான வேட்டை! - கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண் யானை

போர்னியோ என்ற தீவில் உள்ள ஆண் யானை ஒன்று தந்தத்துக்காக 70 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் விலங்குகள், தாவரங்கள், இயற்கை போன்றவற்றிற்கு முழு முதல் எதிரி மனிதன்தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குத் தன் சொந்தத் தேவைக்காகப் பிற உயிரினங்கள் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகிறது. கொம்பு, தந்தம், தோல் போன்ற பல உயிரினங்களின் உடல் உறுப்புகளுக்காக அவை பாரபட்சமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்டு வருகின்றன.

 Disconnection Elephant
Disconnection Elephant
Magnus News/Justin Sullivan

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் யானையின் தந்ததுக்காக அதன் தும்பிக்கை இரண்டாக வெட்டப்பட்ட புகைப்படம் உலகத்தையே உலுக்கியது. விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் எனப் பலத்த குரல் ஒரு புறம் ஒலிக்க மற்றொரு புறம் விலங்குகள் கொல்லப்படுவது மிகவும் சாதாரணமாக நடக்கிறது.

மனதை ரணமாக்கும் விபத்து- தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கு நடந்த சோகம்!#video

ஆசியாவிலேயே மிகப் பெரிய தீவு போர்னியோ (Borneo). இதுதான் உலகின் மிகப்பெரும் மூன்றாவது தீவும் கூட. இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடையில் அமைந்துள்ளது போர்னியோ தீவு. இங்கு உயரமான மலைகள், மிக நீளமான ஆறு, உலகின் அரிதான தாவரங்கள், விலங்குகள் போன்றவை உள்ளன. இயற்கை வளம் மிக்க இந்தத் தீவில் வாழும் யானைகள் போர்னியோ பிக்மி (Borneo Pygmy) வகை யானைகள் என அழைக்கப்படுகின்றன.

Borneo pygmy
Borneo pygmy

போர்னியோவில் உள்ள சபா மாநிலத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் கடந்த வாரம் ஒரு யானை பாதி நீரில் மூழ்கியபடி மிதந்துகிடந்துள்ளது. அதன் உடல் கயிறுகளால் இறுக்கப்பட்டு அருகில் உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்துள்ளன. யானை இறந்ததை அறிந்த வனக்காவலர்கள், அதை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ஆண் யானை உடலில் 70 துப்பாக்கிக் குண்டுகள் இருந்துள்ளன. மேலும் அதன் தந்தங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது என மலேசிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ’இது ஒரு அசாதாரண நிகழ்வு. நான்கு அல்லது ஐந்து வேட்டைக்காரர்கள் இணைந்து தானியங்கி துப்பாக்கி மூலம் யானையைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’ என சபா மாநில வன அதிகாரி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

My Tawau
My Tawau

ஆனால், அந்தக் காட்டுக்கு அருகில் வாழும் மக்கள் துப்பாக்கி சத்தத்தைக் கேட்கவில்லை எனக் கூறியுள்ளதால் யானையின் இறப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. அந்த யானையைக் கொன்றவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு 20,000 ரிங்கிட் (இந்திய மதிப்பில் 3,38,000 ரூபாய்) வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சபா காட்டில் மட்டும் சுமார் 100 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பாதி விஷம் வைத்தும், பாதி துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும், அந்தக் காட்டில் இன்னும் 1500 போர்னியோ பிக்மி யானைகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு