Published:Updated:

அரியவகை கட்டி குறித்து பெண்ணுக்கு அலர்ட்... உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

Apple Watch Series

வேகமாக வளரக்கூடிய இக்கட்டியால், அவரின் இதயத்தில் ரத்த விநியோகம் தடைப்பட்டது; அவருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் இருந்துள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உணர்த்தும் ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் பாதிப்பும் இருப்பது குறித்து, அந்தப் பெண்ணுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்தது.

அரியவகை கட்டி குறித்து பெண்ணுக்கு அலர்ட்... உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

வேகமாக வளரக்கூடிய இக்கட்டியால், அவரின் இதயத்தில் ரத்த விநியோகம் தடைப்பட்டது; அவருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் இருந்துள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உணர்த்தும் ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் பாதிப்பும் இருப்பது குறித்து, அந்தப் பெண்ணுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்தது.

Published:Updated:
Apple Watch Series

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட் போன்களைப் போலவே ஸ்மார்ட் வாட்ச்சுகளின் பயன்பாடும் அவசியமானதாகிவிட்டது. பல முன்னணி பிராண்டுகள் இருந்தாலும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கு சந்தையில் தனி மவுசு உள்ளது. அதற்குக் காரணம், அதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆரோக்கியம் சார்ந்த வசதிகள் இருப்பதுதான்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, நடைப்பயிற்சி தூரம் என உடல்நலன் சார்ந்த விஷயங்களை எளிதாகக் கண்காணிக்கலாம். பல்ஸ் ரேட் குறையும்போது, தாமாக தகவல் தெரிவிக்கும் வகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் உள்ளன. இதனால், நெருக்கடியான காலத்தில் உயிரைக் காக்கும் அரிய சாதனமாகவும் இது கைகொடுக்கிறது. இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன.

Medical Check Up - சித்தரிப்பு படம்
Medical Check Up - சித்தரிப்பு படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவ்வகையில், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், மீண்டும் ஒருமுறை, பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. இம்முறை நடந்திருப்பது, நியூ இங்கிலாந்து மாகாணத்தில். அங்குள்ள மைனே என்ற பகுதியைச் சேர்ந்த கிம் துர்கீ என்ற பெண்ணுக்கு, மிக்ஸோமா என்ற அரியவகை கட்டி இருந்துள்ளது.

வேகமாக வளரக்கூடிய இக்கட்டியால், அவரது இதயத்தில் ரத்த விநியோகம் தடைப்பட்டது; அவருக்கு பக்கவாதம் வரும் அபாயமும் இருந்துள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உணர்த்தும் ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் பாதிப்பும் இருப்பது குறித்து, அந்தப் பெண்ணுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், கிம் முதலில் இதை நம்பவில்லை; அலட்சியப் படுத்தினார். ஆனால், ரத்த ஓட்டம் தடைபட்டு இதயத்துடிப்பு தாறுமாறான பிறகே அவர் இதை உணரத் தொடங்கினார். பின்னர் மருத்துவமனைக்குச் சென்ற கிம்மை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவருக்கு உடலில் அரியவகை கட்டி இருப்பதும், அதனால் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உடல்நல பாதிப்பை எப்படிக் கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தீர்கள் என்று அப்பெண்ணை மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டனர். அப்போதுதான், தனது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அளித்த தகவலே இதற்குக் காரணம் என்று, அந்தப் பெண் கூறியுள்ளார்.

ஸ்மார்ட் வாட்ச்
ஸ்மார்ட் வாட்ச்
சித்தரிப்பு படம்

தன் உடற்பயிற்சி முறையைக் கண்காணிப்பதற்காக கிம் வாங்கி அணிந்து வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், தக்க சமயத்தில் அவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம், முறையற்ற இதயத்துடிப்பு குறித்து அலர்ட் செய்யும் வசதியை, ஸ்மார்ட் வாட்ச்சுகளில் 2020-ல் மீண்டும் அறிமுகம் செய்திருந்தது.