Published:Updated:

4 மாதங்களில் கொல்லப்பட்ட 5 பச்சிளம் குழந்தைகள்... கைதான கொடூர செவிலியர் - என்ன நடந்தது?

நான்கு மாதங்களில் கொல்லப்பட்ட ஐந்து பச்சிளம் குழந்தைகள்

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் பிறந்த ஐந்து குழந்தைகள், சில நாள்களிலேயே உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது.

4 மாதங்களில் கொல்லப்பட்ட 5 பச்சிளம் குழந்தைகள்... கைதான கொடூர செவிலியர் - என்ன நடந்தது?

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் பிறந்த ஐந்து குழந்தைகள், சில நாள்களிலேயே உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது.

Published:Updated:
நான்கு மாதங்களில் கொல்லப்பட்ட ஐந்து பச்சிளம் குழந்தைகள்

அர்ஜென்டினா நாட்டின், கார்டோபா நகரில் அமைந்திருக்கும் ஒரு மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதத்துக்கு இடையில் பிறந்த ஐந்து குழந்தைகள், சில நாள்களிலேயே உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது.

குழந்தைகள் அனைத்தும் இயற்கையான முறையில் மரணம் அடைந்திருப்பதாக நினைத்து இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அப்படியே விட்டுவிட்டனர்.

குழந்தை
குழந்தை

இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் தன்னுடைய பேரக்குழந்தை பிறந்து சில நாள்களில் இறந்தது தொடர்பாக மூதாட்டி ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி, உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நச்சுத்தன்மைவாய்ந்த வேதிப்பொருளைக் குழந்தைகளுக்கு கொடுத்ததால் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கைது
கைது

அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். உயிரிழந்த ஐந்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகளின் மருத்துவப் பதிவுகளை மறுஆய்வு செய்ததில் அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டது தெரியவந்திருக்கிறது. மற்ற மூன்று குழந்தைகளின் மருத்துவப் பதிவுகளையும் மறுஆய்வு செய்துவருகின்றனர். மேலும், நல்ல ஆரோக்கியமான நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சில வேதிப் பொருள்களைக் கொடுத்துக் கொன்றதாக அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையின் செவிலியர் பிரெண்டா அகுவேரோ என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.