Published:Updated:

`நான் இங்கே நீயுமங்கே!' - உக்ரைனில் பிரிந்து வாடும் மகளுக்கு ஆடியோ புக் மூலம் கதை சொல்லும் தந்தை

கதை சொல்லும் தந்தை (Representational Image) ( Pixabay )

உக்ரைனில், மைக்கல்சென்கோ என்பவர் ஆடியோ புக் ஆப் மூலம் பிரிந்திருக்கும் தன்னுடைய மகள் ஒலிவியா-வுக்கு(Olivia) தினமும் கதை சொல்லிவருவது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக முற்றுப்பெறாமல் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக, உக்ரைனைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே அண்டை நாடுகளில் அகதிகளாகிவிட்டனர். அதேபோல் உக்ரைனிலுள்ள ராணுவச் சட்டம் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது. இதன்காரணமாக பல்வேறு ஆண்கள் தங்களது குடும்பத்தைப் பிரிந்து வாடுகின்றனர்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

இதில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 41 வயதான மைக்கல்சென்கோ(Mykhalchenko), நெதர்லாந்தில் அகதிகளாக இருக்கும் தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது மகளைப் பிரிந்து அவதிப்பட்டுவருகிறார். இந்த நிலையில், மைக்கல்சென்கோ ஆடியோ புக் ஆப் மூலம் பிரிந்திருக்கும் தன்னுடைய மகள் ஒலிவியா-வுக்கு(Olivia) தினமும் கதை சொல்லிவரும் நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

book
book

அதாவது மைக்கல்சென்கோ, ​​"பெட்டர் டைம் ஸ்டோரிஸ் (Better Time Stories)" எனும் ஆடியோ புக் ஆப்-பில், தன்னுடைய மகளுக்கு பிடித்தமான `101 கலங்கரை விளக்கங்கள்' எனும் புத்தகத்திலிருந்து தினமும் கதையைப் பதிவுசெய்து வருகிறார். இதன்மூலம், ஒலிவியா தன் தந்தையைப் பிரிந்தாலும்கூட தினமும் தூங்குவதற்கு முன்பு தந்தையின் குரலைக் கேட்கிறார். இது குறித்துப் பேசிய மைக்கல்சென்கோ, ``இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில் ஒலிவியா என்னிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கிறாள்" என உணர்ச்சிமிகக் கூறியிருக்கிறார்.