Published:Updated:

`இப்படியும் ஆசைப்படுவாங்களா?’ 100-வது பிறந்தநாளில் நிறைவேறிய விசித்திர ஆசை... கைதுசெய்த போலீஸ்!

ஜீன் பிக்கென்டன்

ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த பெண்மணியோட விசித்திரமான ஆசை ஒண்ணு, அவங்களோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு நிறைவேறியிருக்கு. அவங்களோட பெயர் ஜீன் பிக்கென்டன்.

`இப்படியும் ஆசைப்படுவாங்களா?’ 100-வது பிறந்தநாளில் நிறைவேறிய விசித்திர ஆசை... கைதுசெய்த போலீஸ்!

ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த பெண்மணியோட விசித்திரமான ஆசை ஒண்ணு, அவங்களோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு நிறைவேறியிருக்கு. அவங்களோட பெயர் ஜீன் பிக்கென்டன்.

Published:Updated:
ஜீன் பிக்கென்டன்

ஆசைகள்... ஆசைகளை வளர்த்துக்கொள்வதும், இதுலதான் ஆசைப்படணும், இதுக்குதான் ஆசைப்படணும், இந்த வயசுலதான் ஆசைப்படணும்னு எந்தவொரு எல்லைக்கோடுமே கிடையாது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகிட்டகூட உன்னோட கடைசி ஆசை என்னன்னு கேப்பாங்க.

சிறுமி
சிறுமி

அதுமட்டுமில்லாம நமக்கு நெருக்கமானவங்க, நம்மைப் புடிச்சவங்கனு பலபேர் நம்மளோட ஆசை என்னன்னு நமக்குத் தெரியாமலேயே தெரிஞ்சுக்கிட்டு நம்மளை சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. அப்போ நாம உணர்ந்த அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள்கூட கிடைக்காது.

என்னதான் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், நாம சமைச்ச சாப்பாடு மாதிரி வருமான்னு, நமக்குத் தோணுமில்லை... அந்த மாதிரிதான் நம்மளோட ஆசை என்னன்னு நமக்கு நாமே தனியா ஒரு லிஸ்ட் போட்டு நிறைவேத்திக்கிறதும்... அப்படி நாம எழுதிவெச்ச ஆசைகளின் லிஸ்ட்டைத்தான் இப்போ பக்கெட் லிஸ்ட்னு (Bucket list) சொல்லிக்கிட்டு இருக்கோம். அதுல சின்ன ஆசை, பெரிய ஆசைனு எதுவுமே கிடையாது. ஆசைப்படுறதுக்கு எதுன்னா வரையறை இருக்கா என்ன... பக்கெட் லிஸ்ட்டை கான்செப்ட்டாவெச்சு, ஹாலிவுட்ல `தி பக்கெட் லிஸ்ட் (The Bucket list), தமிழ்ல `கே.டி என்கிற கருப்புதுரை'-னு படங்கள்கூட வந்திருக்கு.

சிறுவர்கள்
சிறுவர்கள்

இதுலயும் சிலபேர், இப்படியும் ஆசைப்படுவாங்களானு நம்மை வியக்க வைக்கிறதும் உண்டு. அப்படித்தான், ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த பெண்மணியோட விசித்திரமான ஆசை ஒண்ணு, அவங்களோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு நிறைவேறியிருக்கு. அவங்களோட பெயர் ஜீன் பிக்கென்டன் (Jean Bickenton). அவங்களுக்கு இப்போ சரியா 100 வயசு. இவங்க பல தசாப்தங்களாக ராணுவ செவிலியராகப் பணிபுரிஞ்சிருக்காங்க. இதுக்கிடையில இவங்களோட விசித்திரமான அந்த ஆசை என்னன்னு பார்த்தா, அவங்க பலமுறை ஜெயிலுக்குப் போகணும்னு சொல்லியிருக்காங்களாம்.

ஜீன் பிக்கென்டன்
ஜீன் பிக்கென்டன்
facebook

இந்த விஷயம் எப்படியோ விக்டோரியா காவல்துறைக்கும் தெரியவர, காவலர்களும் கரெக்ட்டா ஜீன் பிக்கென்டனோட 100-வது பிறந்தநாள் அன்னைக்கு, அவங்க தங்கியிருந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று கையில விலங்கு மாட்டி, கைது பண்ணி சர்ப்ரைஸ் குடுத்திருக்காங்க. விக்டோரியா காவல்துறை இதை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்காங்க. இதைப் படிக்கும்போதே ஆச்சர்யமாப் பார்க்குற உங்களை மாதிரியே, சமூக வலைதளங்கள்ல நெட்டிசன்களும் ஆச்சர்யத்தோட தங்களோட கருத்துகளை இதுக்குப் பதிவிட்டுட்டு வர்றாங்க. இதைப் பற்றி விக்டோரியா காவல்துறை, ``இது போன்ற ஒரு கைது நடவடிக்கையை மேற்கொண்டதில் நாங்கள் மகிழ்சியாக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறது.

இந்த மாதிரி நீங்களும் உங்களோட ஆசைகளை லிஸ்ட் போட்டு வைங்க. யாருக்குத் தெரியும்... யாருக்கு, யார் எப்போ சர்ப்ரைஸ் குடுப்பாங்கனு..!