Published:Updated:

`காட்டுத் தீக்கு நடுவே தந்தையின் 5 நிமிடத் தூக்கம்!’- ஆஸ்திரேலியப் பெண்ணின் நெகிழ்ச்சிப் பதிவு

தீயணைப்பு வீரர்
தீயணைப்பு வீரர்

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீச் சம்பவங்கள் அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுன. தீயை அணைக்கு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ தொடர்பாக சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ
ஆஸ்திரேலியக் காட்டுத் தீ

நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் களைப்புடன் உறங்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

`என்னைக் காப்பாற்றிய ஷீரோ அவள்..!’- காட்டுத் தீக்கு நடுவே ஆஸ்திரேலியப் பெண்ணின் திகில் அனுபவம்

ஜென்னா என்பவர் தன் முகநூலில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் பதிவில், `இந்தப் படத்தில் இருப்பது என்னுடைய தந்தை. புல்வெளியில் 5 நிமிடங்கள் உறங்குகிறார். அதே நேரத்தில் என் சகோதரன் பற்றி எரியும் தீயை 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கண்காணித்து வருகிறார். 10 நாள்களாக இந்தப் பணியைத்தான் செய்து வருகிறார்கள். என்னுடைய குடும்பத்தினர் இந்தத் தீயை அணைக்கும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இருப்பவர்கள் ஒரு மாதங்களாக தீயை அணைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். அவர்கள் சோர்வடைந்து விட்டார்கள், காயம் ஏற்பட்டுள்ளது. போதிய வளங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

இன்று என் தந்தை அழுததை நான் கேட்டேன். அவர் என்னிடம் ஜென், `நான் இதுபோன்ற தீவிபத்தை இதுவரை பார்த்ததில்லை. இது முடிவதாகத் தெரியவில்லை’ என்றார். கோடைக்காலம் முடிவதற்கு இன்னும் 50 நாள்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா தீயில் சிக்கித்தவிக்கிறது. நாட்டில் உள்ள தைரியமான நபர்கள் தன்னார்வத்தோடு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சியால்தான் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம் அவர்களுக்கு நன்றி’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு