Published:Updated:

உக்ரைன்: `இந்தியர்களை மீட்க எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம்' - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற முயல்வதால் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருக்கிறது.

உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு படிப்பதற்காகச் சென்றிருக்கும் மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைனிலிருந்து வெளியேறவும், அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற எல்லா ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

மேலும், உக்ரைனில் தங்கியிருப்பவர்களின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

மத்திய அரசு
மத்திய அரசு

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற முயல்வதால் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!