Published:Updated:

`தேசத்தின் நலன் கருதி' - பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்! பின்னணி என்ன?

முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஆயிஷா மாலிக்

பாகிஸ்தானின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

`தேசத்தின் நலன் கருதி' - பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்! பின்னணி என்ன?

பாகிஸ்தானின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published:Updated:
முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஆயிஷா மாலிக்

பாகிஸ்தான் விடுதலையடைந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல்முறையாக ஒரு பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கு சமூக ஆர்வலர்கள் தங்களுடைய வரவேற்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயிஷா மாலிக், 2012 முதல் பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜூன் 2021 இல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மீண்ட பெண்களிடம் கன்னித்தன்மைக்கான சோதனை எடுப்பதை "சட்டத்திற்கு புறம்பானது மற்றும் பாகிஸ்தானின் அரசியலமைப்புக்கு எதிரானது" எனச் சாடி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர், ஆயிஷா மாலிக்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செனட்டர் பாரூக் தலைமையிலான இருதரப்பிலான பார்லிமென்டரி கமிட்டி தங்களுடைய நாமினேஷனாக ஆயிஷா மாலிக்கைத் தேர்வு செய்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். சீனியாரிட்டி வரிசையில் நான்காவதாக இருந்த ஆயிஷாவைத் 'தேசத்தின் நலன் கருதி' தேர்வு செய்யதுள்ளதாக பாரூக் குறிப்பிட்டு இருந்தார். 55 வயதான ஆயிஷா மாலிக்கின் நியமனத்தை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆரீப் அலி. கடந்த ஆண்டு இவர் பரிந்துரையில் இருந்த போதே பார்லிமென்டரி கமிட்டி சீனியாரிட்டி அடிப்படையில் ஆயிஷாவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

ஆயிஷா மாலிக் ஜூன் 2031 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியில் இருப்பார். அதன் பிறகு தலைமை நீதிபதியாகும் வாய்ப்பும் இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தலைமை நீதிபதி பொறுப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அப்படியாக அமைந்தால் பாகிஸ்தானின் முதல் தலைமை பெண் நீதிபதி என்கிற பெயரையும் ஆயிஷா மாலிக் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.1966இல் பிறந்த ஆயிஷா மாலிக் தன்னுடைய கல்வியை பாரிஸ், நியூயார்க், காராச்சி நகரங்களிலும் சட்ட படிப்பை பாகிஸ்தான் சட்டக் கல்லூரியிலும் சட்ட மேற்படிப்பை ஹார்வர்டிலும் நிறைவு செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism