Published:Updated:

இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்... 30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை - வீடியோ

30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை ( ட்விட்டர் )

ஜோர்டானில் கட்டடம் இடிந்து விழுந்த 30 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

செப்டம்பர் 13-ம் தேதி ஜோர்டன் தலைநகர் அம்மானில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மலாக் என்ற நான்கு மாதக் குழந்தை இடர்பாடுகளில் சிக்கியது தெரியவந்தது. 30 மணி நேரமாக குழந்தையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவந்தனர். 14 பேர் உயிரிழந்த நிலையில் குழந்தையும் இறந்திருக்கக் கூடும் என்றே பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.ஆனால் 30 மணி நேரத்திற்குப் பிறகு மலாக் என்ற நான்கு மாதக் குழந்தை உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரப்பப்படுகிறது. இந்த குழந்தைதை 'நம்பிக்கையின் சின்னம் (icon of hope) என அழைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அந்த குழந்தையில் தாய், `` என் மகள் உயிருடன் இருப்பதாக எனக்கு ஒரு தைரியம் இருந்தது. அவள் எங்களுக்காக காத்திருக்கிறாள் என்று என் கணவர் எனக்கு உறுதியளித்தார்'' என கூறினார்.