Published:Updated:

தோண்டியெடுக்கப்பட்டு எரியூட்டப்பட்ட 117 சடலங்கள்; தீவு மக்களின் வித்தியாச விழா! - எங்கு தெரியுமா?

எரியூட்டப்பட்ட 117 சடலங்கள் ( ட்விட்டர் )

கடற்கரையோரத்தில், இறந்து புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழா கொண்டாடப்பட்டது.

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், இறந்து புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழா கொண்டாடப்பட்டது. இந்தோனேசியாவின் பாலி தீவில் வசிக்கும் மக்கள் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். இறந்தவர்கள் எரிக்கப்படும்போது அவர்களின் ஆன்மா விடுதலையடைவதாகவும், அதனால் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்பும் அந்தப் பகுதி மக்கள், புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பிறகு தோண்டியெடுத்து எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால் செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாகத் தெரிவிக்கிறார்கள் அந்த மக்கள்.