Published:Updated:

இங்கிலாந்தில் டிரெண்டாகும் `work from Pub' - என்னென்ன வசதிகள் தெரியுமா?!

`work from Pub'

இங்கிலாந்தில், `வொர்க் ஃப்ரம் பப்'(work from Pub) எனும் புதிய முறை டிரெண்டாகி வருகிறது. இதற்கான ஆரம்பப்புள்ளி, பலர் ஹோட்டல்கள், பார்களில் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலைசெய்வதுதான் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் டிரெண்டாகும் `work from Pub' - என்னென்ன வசதிகள் தெரியுமா?!

இங்கிலாந்தில், `வொர்க் ஃப்ரம் பப்'(work from Pub) எனும் புதிய முறை டிரெண்டாகி வருகிறது. இதற்கான ஆரம்பப்புள்ளி, பலர் ஹோட்டல்கள், பார்களில் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலைசெய்வதுதான் என்று கூறப்படுகிறது.

Published:Updated:
`work from Pub'

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உலகெங்கிலும் மக்களின் வாழ்க்கையை, எதார்த்திலிருந்து சற்று மாற்றியமைத்துவிட்டது என்றே சொல்லலாம். அத்தகைய மாற்றத்திலிருந்து மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அத்தகைய மாற்றத்தில், கம்பெனிகளில் பணியாளர்களுக்கு அறிமுகமான `வொர்க் ஃப்ரம் ஹோம்'(work from home) எனும் மாற்றத்திலிருந்து மட்டும் பணியாளர்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

Work From Home
Work From Home
pexels

இதற்கான காரணங்களாக, `வொர்க் ஃப்ரம் ஹோம் பழகிவிட்டது' , `இதுகொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது' என பணியாளர்கள் சொல்வதாகச் செய்திகளும் அவ்வப்போது உலவுகின்றன. இதற்கிடையில், `வொர்க் ஃப்ரம் ஹோம்' செய்பவர்கள் பலர் பார்க், ஹோட்டல் என பல இடங்களில் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலைசெய்வது போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தன.

இந்த நிலையில் இதுபோன்ற நபர்களைக் கவரும் விதமாக இங்கிலாந்தில், `வொர்க் ஃப்ரம் பப்'(work from Pub) எனும் புதிய முறை டிரெண்டாகி வருகிறது. இதற்கான ஆரம்பப்புள்ளி, இங்கிலாந்தில் பலர் ஹோட்டல்கள், பார்களில் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலைசெய்வதுதான் என்று கூறப்படுகிறது.

work from Pub
work from Pub

இதனைக் கவனித்த, Young's pubs, Fuller's Brewery, B&K - Microbrewery and British Pub போன்ற Pub-கள், `வொர்க் ஃப்ரம் பப்' என்பதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியும், விரிவுபடுத்தியும் வருகின்றன. இதில் Fuller's Brewery, தங்களின் 380 Pub-களில் ஒரு நாளைக்கு வெறும் 10 பவுண்டுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.900-க்கு மதிய உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்குகிறது. மேலும் B&K - Microbrewery and British Pub, அதே 10 பவுண்டுக்கு `workspace'-ஐ வழங்குகிறது. இந்த workspace-ல் WiFi, power sockets, ப்ரின்டிங் மற்றும் அன்லிமிடெட் சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.