Published:Updated:

ஆன்லைனில் மிச்சேல் பிராண்ட் பொருள்கள்!- ஏழைச் சிறுமிகளின் படிப்புக்குச் செல்லும் வருமானம்

ஆரம்பகால வாழ்க்கை, இருவரின் காதல் காலம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள், அமெரிக்காவில் ஆரம்பித்த அரசியல் பயணம் என அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து எழுதியுள்ளார் மிச்சேல்.

சிறுமிகளுடன் மிச்சேல்
சிறுமிகளுடன் மிச்சேல் ( instagram )

எழுத்தாளர், வழக்கறிஞர், பெண்கள் நலனுக்காகக் குரல்கொடுப்பவர், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை முன்னெடுப்பவர், நேர்த்தியாக உடையணிபவர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர் மிச்சேல் ஒபாமா, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி.

குடும்பத்துடன் மிச்சேல்
குடும்பத்துடன் மிச்சேல்
instagram

மிச்சேல், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பை 2018-ம் ஆண்டு 'Becoming' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அந்த வருடத்தில் அமெரிக்காவில் வெளியான மற்ற புத்தகங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, மிச்சேலின் புத்தகமே அதிகளவில் விற்பனையானது. அதுவும் வெறும் 15 நாள்களில் இந்தச் சாதனை நிகழ்ந்தது. தற்போது இந்தப் புத்தகத்தின் 'ஆடியோபுக்' வெர்ஷன், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 24 அதிகாரங்கள் அடங்கியுள்ள இந்தப் புத்தகத்தில், 'பிகமிங் மீ (Becoming Me)', 'பிகமிங் அஸ் (Becoming Us)', 'பிகமிங் மோர் (Becoming More)' என மூன்று பிரிவுகள் உள்ளன.

பிகமிங் (Becoming)
பிகமிங் (Becoming)
unsplash.com

மிச்சேல் மற்றும் ஒபாமாவின் ஆரம்பகால வாழ்க்கை, இருவரின் காதல் காலம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள், அமெரிக்காவில் ஆரம்பித்த அரசியல் பயணத்தின் முடிவில் அதிபராக வெற்றிபெற்று, அந்நாட்டின் முதல் குடும்ப அந்தஸ்தைப் பெற்றது என அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து எழுதியுள்ளார் மிச்சேல்.

புத்தகத்தின் விற்பனையில், ஒரு மில்லியன் பதிப்புகளின் வருமானத்தை அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் 'ஃபர்ஸ்ட் புக்' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினார் மிச்சேல்.

மிச்சேல் ஒபாமா
மிச்சேல் ஒபாமா
instagram

இந்த அமைப்பு, புத்தகங்கள் முதல் கல்விவரை குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.

மிச்சேலின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஊக்கப்படுத்தும் வாக்கியங்கள் மற்றும் நேர்மறையான கருத்துகள் சுருக்கமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் டி ஷர்ட்கள், மிச்சேலின் கையொப்பமிடப்பட்ட தொப்பி என ஆர்வமூட்டும் பல விஷயங்கள் இந்த பிராண்ட் பொருள்களில் இருக்கின்றன.

சிறுவர்களுடன் மிச்சேல்
சிறுவர்களுடன் மிச்சேல்
facebook.com

விற்பனையாகும் பொருள்களின் மூலம் கிடைக்கும் தொகை, வசதியில்லாத பெண் குழந்தைகளின் படிப்புக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.