Published:Updated:

`வீட்டு அடித்தளத்தில் முன்னரே உணவு சேமித்துவிட்டோம்..!’ - கொரோனா பற்றி மெலிண்டா கேட்ஸ்

வைரஸ் தொற்று பற்றி முன்னரே தெரிந்ததால் அப்போதே தேவையான உணவைச் சேமித்துவிட்டதாக மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள், தொற்று இல்லாதவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிரமத்தைக் கொடுத்து வருகிறது இந்தக் கொரோனா. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் முன்னரே சேமித்து வைத்துவிட்டனர், சில வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள்.

மெலிண்டா கேட்ஸ்
மெலிண்டா கேட்ஸ்

இந்தநிலையில், வைரஸ் பற்றி முன்னரே அறிந்த பில்கேட்ஸ் குடும்பத்தினர் ஊரடங்கு நேரத்தில் உதவியாக இருக்கும் என்பதற்காக முன்னரே உணவு சேகரித்து வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பிபிசி ரேடியோவுக்கு பேட்டியளித்துள்ள பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ``பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை வந்தால் என்ன செய்வது என்பது பற்றி நாங்கள் பேசினோம். சுத்தமான நீர் இல்லாவிட்டால் என்ன செய்வது... போதுமான உணவு இல்லாவிட்டால் என்ன செய்வது... நாம் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் எங்கு செல்வது... நாம் ஒரு குடும்பமாக என்ன செய்ய முடியும் என்பன உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்தோம்.

இந்தச் சூழல் வந்தால் அதைச் சமாளிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டு அடித்தளத்தில் சிறிது உணவை சேமித்து வைத்திருந்தோம். இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், `முறையான உபகரணங்கள் இல்லாததால் கொரோனாவுக்கு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. ஆனால், இப்போது ஒவ்வொரு நாள் இரவும் நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதைப் பற்றித்தான் பெரும்பாலும் விவாதிக்கிறோம். எங்கள் பாக்கியத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

2018-ம் ஆண்டு ஒரு மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் பெயரைக் குறிப்பிடாமல் அதன் ஆபத்தைப் பற்றி பேசியுள்ளார்.

`ஓர் ஆபத்தான தொற்று நோய் உலகையே அச்சுறுத்தக்கூடும். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். ஒரு போருக்குத் தயாராவதுபோல் உலக நாடுகள் வைரஸ் ஆபத்துக்கு எதிராகத் தயாராக வேண்டும். உலகின் எந்த நாட்டுக்கும் சில மணி நேரங்களில் நம்மால் பயணம் செய்யும் நிலை உள்ளதால் இந்த வைரஸ் எளிதில் பரவிவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘6-10 வாரம் கடுமையான ஊரடங்கு தேவை!’ -அமெரிக்காவுக்கு பில்கேட்ஸ் அட்வைஸ் #Coronavirus

அதேபோல் பில்கேட்ஸ் தன் சிறு வயதில் அணுசக்தி யுத்தம் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகவும் அதுபோன்ற நெருக்கடியான காலத்தில் உதவுவதற்காகத் தங்கள் வீட்டு அடித்தளத்தில் பெரிய பீப்பாயில் தண்ணீர், உணவுகள் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் எதிர்பார்த்தது போலவே அணுசக்தி யுத்தம் வந்தபோது மொத்த குடும்பத்தினரும் வீட்டின் அடித்தளத்தில் பதுங்கியிருந்து சேமித்த உணவைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் 2015-ம் ஆண்டு மற்றொரு மாநாட்டில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு