Published:Updated:

அன் வின்பிளாடுடன் நேரம் செலவிடும் பில்கேட்ஸ்... பழைய பேட்டியில் அவர் சொன்னது என்ன?

Bill and Melinda Gates ( AP Photo / Elaine Thompson )

இரண்டு பேருக்கும் இடையில், திருமணத்துக்குப் பிறகும் ஒரு நல்ல நட்பு இருந்ததாகவே தெரிவித்திருக்கிறார்கள். பில் கேட்ஸை விட ஐந்து வயது மூத்தவரான அன் வின்பிளாட், மெலிண்டாவே பில்கேட்ஸூக்குப் பொருத்தமான இணையர் எனத் தெரிவித்திருக்கிறார்.

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் தங்கள் 27 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகச் சில நாள்களுக்கு முன் அறிவித்தனர். அவர்களது விவாகரத்து செய்தியை அடுத்து அவர்களைப் பற்றிய பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. பில்கேட்ஸ் தனது முன்னாள் காதலியான அன் வின்பிளாட் (Ann Winblad) உடன் ஒவ்வொரு ஆண்டும் சிறிது நேரம் செலவிடுவார் என்ற செய்தியும் பகிரப்பட்டு வருகிறது.

அன் வின்பிளாட் சான் பிரான்ஸிஸ்கோவில் தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த எட்வர்டு அலெக்ஸ் கிளெய்ன் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். வின் பிளாட் ஒரு மென்பொருள் தொழில்முனைவோரும் கூட.

Ann Winblad and Billgates
Ann Winblad and Billgates

அவருடன் நேரம் செலவிடுவதை பில்கேட்ஸ் எப்போதும் விரும்பி இருக்கிறார். மெலிண்டாவைத் திருமணம் செய்ததில் இருந்தே அவரின் அனுமதியுடன் வருடத்திற்கு ஒரு முறை அன் வின்பிளாடைச் சந்தித்து வந்திருக்கிறார் பில்கேட்ஸ். மெலிண்டாவுக்கு பிரபோஸ் செய்ய, அன் வின்பிளாட்தான் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் முன்னமே டைம்ஸ் இதழுக்கு (1997-ல்) அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் பில் கேட்ஸ். அதுதான் தற்போது வைராலாகி வருகிறது.

இரண்டு பேருக்கும் இடையில், திருமணத்துக்குப் பிறகும் ஒரு நல்ல நட்பு இருந்ததாகவே தெரிவித்திருக்கிறார்கள். பில் கேட்ஸை விட ஐந்து வயது மூத்தவரான அன் வின்பிளாட், மெலிண்டாவே பில்கேட்ஸூக்குப் பொருத்தமான இணையர் எனத் தெரிவித்திருக்கிறார். பில் கேட்ஸூம் அன் வின்பிளாடும் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் தங்களைப் பற்றியும், உலக நிகழ்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism