Published:Updated:

48 ஆண்டுகளுக்கு முந்தைய பயோடேட்டா... தனது முதல் Resume-ஐ பகிர்ந்த பில் கேட்ஸ்!

பில் கேட்ஸ்

66 வயதான பில்கேட்ஸ் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது Resume-ஐ பகிர்ந்து, அது குறித்து உரையாற்றியிருக்கிறார்.

48 ஆண்டுகளுக்கு முந்தைய பயோடேட்டா... தனது முதல் Resume-ஐ பகிர்ந்த பில் கேட்ஸ்!

66 வயதான பில்கேட்ஸ் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது Resume-ஐ பகிர்ந்து, அது குறித்து உரையாற்றியிருக்கிறார்.

Published:Updated:
பில் கேட்ஸ்

வேலை தேடுபவர்களின் முதல் பணி, சிறப்பான Resume ஒன்றைத் தயாரிப்பது. தங்களின் கனவு வாழ்க்கைக்கு ஏற்றவாறும், நல்ல வேலை கிடைக்கவும், நமது திறனைச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும். அதற்கான முதல் அடித்தளம் Resume. நம்மைப் பற்றி குறிப்பிட்ட நிர்வாகத்துக்கு ஓர் அறிமுகத்தை அது வழங்கும்.

அப்படி, தனது வாழ்வின் முதல் Resume-ஐ உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான வேலை தேடும் இளைஞர்களின் நம்பிக்கையை அதிகரிக்கப் பகிர்ந்திருக்கிறார். 66 வயதான அவர் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது Resume-ஐ பகிர்ந்து, அது குறித்து உரையாற்றினார்.

பில்கேட்ஸ்-ன் முதல் resume
பில்கேட்ஸ்-ன் முதல் resume
ட்விட்டர்

அப்போது அவர், "எனது பயோடேட்டாவை விட தற்போது இருக்கும் இளைஞர்களின் பயோடேட்டா நன்றாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். நீங்கள் சமீபத்திய பட்டதாரியாக இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததைவிட உங்கள் விண்ணப்பம் மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹார்வர்டு கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது அவரின் பெயர், வில்லியம் ஹென்றி கேட்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், அதில் இயக்க முறைமைகள் அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கணினி வரைகலை உள்ளிட்ட கல்வித் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, சமூக வலைதள பயனர்கள், `Resume பகிர்ந்தமைக்கு நன்றி.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

ஒரு பக்க ரெஸ்யூம் அருமை. நாம் அனைவரும் திரும்பிச் சென்று பார்க்க, நமது கடந்தகால பயோடேட்டாக்களின் நகல்களை வைத்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில், அதைப் பார்க்கும்போது நம் வாழ்வை எங்கிருந்து தொடங்கினோம், என்ன சாதித்தோம் என்பது நினைவுக்கு வரும்’ என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.