Published:Updated:

`மன்னித்துவிட்டேன்; உங்களை நேசிக்கிறேன்!'- சகோதரனைக் கொன்ற பெண்ணைக் கட்டித்தழுவி கலங்க வைத்த இளைஞர்

இளைஞர்
இளைஞர்

``நான் ஒருபோதும் ஓர் அப்பாவியின் உயிரை எடுக்க விரும்பியதில்லை. இந்தச் செயலுக்காக நான் என்னையே வெறுக்கிறேன்'' என்று நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ளார் முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி.

அமெரிக்காவில் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன் டல்லாஸ் நகர நீதிமன்றத்தில் நடந்தது. போதம் ஜீன் என்ற 27 வயது வாலிபரை ஆம்பர் கைகெர் என்ற பெண் காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு அது. 2018-ம் ஆண்டு நடந்த சம்பவம் குற்றவாளிக்குக் கிடைக்கப்போகும் தீர்ப்பை எதிர்நோக்கி போதம் குடும்பத்தினர் காத்திருந்தனர். இது ஒரு நிறவெறித் தாக்குதல். வேண்டுமென்ற கறுப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று கூறி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பர் கைகெர் கைது செய்யப்பட்டார். கைகெர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது காவலர் சீருடையில் இருந்துள்ளார். அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகேதான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. போராட்டக்காரர்கள் கைகெருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

`மன்னித்துவிட்டேன்; உங்களை நேசிக்கிறேன்!'- சகோதரனைக் கொன்ற பெண்ணைக் கட்டித்தழுவி கலங்க வைத்த இளைஞர்

கைகெர் அன்றைய தினம் நீண்ட நேரம் பணியாற்றிவிட்டு வீடு திரும்பியுள்ளார். தவறுதலாக அவரது அப்பார்ட்மென்ட் இல்லாமல் வேறொரு அபார்ட்மென்டுக்கு நுழைந்தார். தன்னிடம் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால், கதவு பாதி திறந்திருந்ததையடுத்து வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது வீட்டினுள் இருந்த போதம் ஜீனை துப்பாக்கியால் சுட்டார் கைகெர். இரண்டு குண்டுகள் அவரது உடலைத் துளைத்த நிலையில் போத்தம் உயிரிழந்தார்.

கைகெர்,``நான் வேண்டுமென்றே ஓர் அப்பாவியின் உயிரை எடுக்கவில்லை. அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்ததாக தவறாக நினைத்துவிட்டேன். இது நிற வெறியால் நடந்த தாக்குதல் அல்ல. பயம் மற்றும் பதற்றத்தின் காரணமாக நடந்தது” என விசாரணையின்போது கூறினார்.

`இங்கிலாந்து டு அமெரிக்கா!' - பூமியைக் காப்பாற்ற 16 வயதுப் பெண்ணின் 2 வாரப் படகுப் பயணம்

கைகெரின் இந்தப் பதிலை மக்கள் ஏற்கவில்லை. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை டல்லாஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கைகெருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் கதறி அழுத ஆம்பர் கைகெர்,``நான் ஒருபோதும் ஓர் அப்பாவியின் உயிரை எடுக்க விரும்பவில்லை. இந்தச் செயலுக்காக நான் என்னையே வெறுக்கிறேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் இந்தக் கசப்பான நினைவுகளுடன்தான் வாழ வேண்டும். நான் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இது வெறுப்பால் நடந்தது இல்லை. அன்றிரவு ஏற்பட்ட பயத்தாலும் பதற்றத்தாலும் நடந்தது'' என்றார்.

amber guyger
amber guyger

நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும், போதம் ஜீன்னின் இளைய சகோதரர் நீதிமன்றத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ``நான் அவரை மன்னித்துவிட்டேன் அவருக்கு ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும்'' எனக் கூறினார். நீதிபதி அவருக்கு அனுமதி வழங்கினார். கைகெரை ஆரத்தழுவியவர், ``நான் உங்களை மன்னித்துவிட்டேன். கடவுளும் உங்களை மன்னிப்பார். மற்றவர்களைப் போலவே நானும் உங்களை நேசிக்கிறேன். இதை என் குடும்பத்தினருக்காகவோ மற்றவர்களுக்காகவோ நான் கூறவில்லை. நீங்கள் சிறைக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. உங்களுக்குச் சிறந்ததை அளிக்க விரும்புகிறேன். ஏனென்றால் போத்தம் விரும்புவதும் இதுதான் என்று எனக்குத் தெரியும்” என அவர் கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. நீதிபதியும் அந்தப்பெண்ணுக்குப் பைபிளை வழங்கினார். முதல் ஐந்து வருடங்களை கைகெர் சிறையில்தான் கழிக்க வேண்டும். ஐந்து வருடத்துக்குப் பிறகு அவருக்கு பரோல் வழங்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு