Published:Updated:

இந்தோனேசியா நிலநடுக்கம்: இரண்டு நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் - நெகிழ்ச்சி சம்பவம்

காப்பாற்றப்பட்ட சிறுவன் ( ட்விட்டர் )

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தோனேசியா நிலநடுக்கம்: இரண்டு நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் - நெகிழ்ச்சி சம்பவம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
காப்பாற்றப்பட்ட சிறுவன் ( ட்விட்டர் )

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில், ரிக்டர் அளவில் 5.6 எனப் பதிவாகியிருக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். படுகாயமடைந்த 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு சாலையோரங்களிலேயே முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

இந்தோனேசியா நிலநடுக்கம்
இந்தோனேசியா நிலநடுக்கம்
ட்விட்டர்

இந்த நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 5,300-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் The National Disaster Management Agency தெரிவித்திருக்கிறது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பெரும்பாலானோர் இன்னும் மீட்கப்படாமல் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.

இந்தோனேசியா நிலநடுக்கம்
இந்தோனேசியா நிலநடுக்கம்
ட்விட்டர்

இதனிடையே, நிலநடுக்கம் நிகழ்ந்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக மீட்புப் பணியில் இருந்த உள்ளூர் தன்னார்வலர் ஜெக்சன், ``நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான Cugenang-ல் இடிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, இடிபாடுகளுக்கு இடையே இறந்த பாட்டியின் உடல் அருகில் சிறுவன் ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டான்.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
ட்விட்டர்

இந்தப் பேரிடர் நடந்து 48 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் நாங்கள் சிறுவன் அஸ்கா மௌலானா மாலிக்கை மீட்டோம். சிறுவன் இறந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டுதான் அவனைத் தூக்கினோம். ஆனால், அவன் உயிருடன் இருந்தான். அவனை நான் தூக்கியதும் அவன் என் கரங்களைப் பற்றிக்கொண்டான். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிறுவன் அஸ்கா உயிருடன் இருப்பதை நாங்கள் உணர்ந்தவுடன், நான் உட்பட பலரும் கண்ணீர்விட்டோம். இந்த நிகழ்வை அதிசயம்போல் உணர்ந்தோம். அதற்குப் பிறகு புதிய உத்வேகம் பிறந்தது. இன்னும் பலர் உயிருடன் போராடிக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் மீட்புப் பணியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.