Published:Updated:

கொரோனா பாசிட்டிவ்: பத்திரிகையாளர்கள் முன் மாஸ்கைக் கழட்டி சர்ச்சையில் சிக்கிய பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்

கொரோனா பாசிட்டிவ் என உறுதியான பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தன் மாஸ்கை கழட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரேசில் அதிபர்.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,74,655 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66,868- ஆகவும் உள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் மொத்த உலகமும் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்த சமயத்தில், வைரஸை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்தார் பிரேசில் அதிபர்.

பிரேசில்
பிரேசில்

‘கொரோனா சாதாரண ஃபுளூ தான். அதைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை, முக கவசம், சமூக இடைவெளி ஆகிய எதையும் பின்பற்றத் தேவையில்லை. மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம். லாக்டௌனில் மக்கள் வீட்டுக்குள் முடங்கினால் கொரோனாவை விட மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்படும் எனவே அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுங்கள்’ என பிரசாரம் செய்தார் அதிபர் பொல்சனாரோ. இவரின் கருத்து உலக சுகாதார நிறுவனம் உள்பட அனைத்து தலைவர்களின் விமர்சனங்களையும் பெற்றது.

`WHO-வுக்கு எச்சரிக்கை; மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிரேசில்!’ - ட்ரம்ப்பை பின்பற்றும் பொல்சனாரோ?

பின்னர் பொல்சனாரோ, பொது வெளியில் முகமூடி இல்லாமல் மக்கள் முன் தோன்றுவது, அவர்களுடன் கைக்குலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தால். இதைக் கண்டித்த அந்நாட்டு நீதிமன்றம், அதிபர் பொதுவெளியில் வரும்போது கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் நாள் ஒன்றுக்கு 390 டாலர் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கொரோனா தொடர்பான சர்ச்சைகளில் சிக்காமலிருந்த அதிபர் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

அதிபர் பொல்சனாரோ
அதிபர் பொல்சனாரோ

அதிபர் பொல்சனாரோவுக்கு நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார் அதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. தனக்கு கொரோனா உறுதியானதைச் செய்தியாளர்கள் முன் அறிவித்தார் அதிபர், அப்போது பேசிய அவர், ‘என் சோதனை முடிவுகள் வெளியாகிவிட்டன. அதில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இருந்தும் என் உடல்நிலை எப்போதும் போல ஆரோக்கியமாகவே உள்ளது. என் நுரையீரலும் சோதனை செய்யப்பட்டது அதுவும் நார்மலாக இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Brazil's President Jair Bolsonaro removes his face mask before leaving a press conference in Brasilia's Alvorada Palace,...

Posted by Rappler on Tuesday, July 7, 2020

எனக்கு மிகவும் குறைந்த அளவிலான பாதிப்புதான் உள்ளது. இதிலிருந்து விரைவில் குணமடைந்துவிடுவேன். கொரோனாவுக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளைத்தான் எடுத்துக்கொள்கிறேன்” எனத் தன்னைப் பற்றியும் தன் நாட்டு நிலை பற்றியும் நிறைய கருத்துகளைக் கூறிய அவர், தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் இருந்து சில அடிகள் பின் நோக்கி நகர்ந்து தான் அணிந்திருந்த மாஸ்கை கழட்டி விட்டுப் பேசினார்.

‘என் முகத்தைப் பாருங்கள். நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு தற்போது இந்த இடத்தை சுற்றி நடக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப் படி நான் அவ்வாறு செய்யக்கூடாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதி, எப்போதும் மக்கள் நடுவில் இருக்க விரும்புகிறேன்’ எனத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன் மாஸ்கை கழட்டியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதிபரின் செயலை விமர்சித்தும் அவரை கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதிபர் மாஸ்கை கழற்றும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு